டிசம்பரில் வெளியாகும் விஷால் 34 பட தலைப்பு

0
131

பெயரிடப்படாத விஷால் 34 படத்திற்கு வரும் டிசம்பர் 1ம் திகதி டைட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக நடிகர் விஷால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பில் ஸ்டெத் மற்றும் துப்பாக்கி இரண்டும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் படியான போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அதிரடி ஆக்ஷன் களத்தில் இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகவுள்ள நிலையில், மருத்துவ சம்பந்தமான பிரச்சினைகளை படம் சொல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றனர். முன்னதாக தாமிரபரணி மற்றும் பூஜை படங்களில் இணைந்திருந்த இந்தக் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

இந்த இரு படங்களும் சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது விஷால் 34 படமும் இந்தக் கூட்டணிக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். மார்க் ஆண்டனி படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Vishal 34