ஒரே நாளில் 47,500 கோடி சம்பாதித்த அதானி

0
171

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வர் மற்றும் தொழிலதிபருமான கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழும பங்குகள் பாரிய அளவில் உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் மட்டுமே 47498.1 கோடி ரூபாய்ச் சம்பாதித்துள்ளார்.

போர்ஸ் தளத்தின் தகவல் படி கௌதம் அதானி சொத்து மதிப்பு இன்று ஒரு நாளில் மட்டும் 5.7 பில்லியன் டொலர் அதிகரித்து 57.1 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. அதானி குழும பங்குகள் திடீரென உயர என்ன காரணம்…?

இதேபோல் மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சுமார் 20 சதவீதம் வரை உயர்ந்ததால் அதானி குழுமத்தில் பெரும் தொகையை முதலீடு செய்துள்ள ராஜீவ் ஜெயின் தலைமையிலான GQG பார்ட்னர்ஸ் ஒரே நாளில் சுமார் ரூ.3,000 கோடி இலாபம் ஈட்டியுள்ளது.

இந்திய தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், வெள்ளிக்கிழமை அதானி – ஹிண்டன்பெர்க் ரிசர்ச் குறித்த விசாரணையில் போது ஒரு சில ஊடக அறிக்கைகளை மட்டும் நம்பி இந்த வழக்கில் சந்தை கண்காணிப்பாளரின் விசாரணையை நீதிமன்றம் சந்தேகிக்க முடியாது என்று கூறினார்.

ஆனால் சந்தை கட்டுப்பாட்டாளரான செபி அதானி – ஹிண்டன்பெர்க் ரிசர்ச் அறிக்கையில் தொடர்புடைய 24 வழக்குகளிலும் விசாரணையை முடிக்க வேண்டும் என்று கூறினார். முன்பு செபி சமர்ப்பித்த ஆகஸ்ட் 25 அறிக்கையில் 24 வழக்குகளில் 22 இல் தனது விசாரணையை முடித்துவிட்டதாகச் செபி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் பேசிய அதானி குழுமத்திற்குச் சாதகமாக அமைந்தது மட்டும் அல்லாமல் ஹிண்டன்பெர்க் ரிசர்ச் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விடச் செபியின் விசாரணையின் முடிவுகள் தான் இறுதி மற்றும் முக்கியம் என்பதைக் குறித்தும் வகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக அதானி குழும பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

AceEquity தரவுகள் படி ராஜீவ் ஜெயின் தலைமையிலான GQG பார்ட்னர்ஸ் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்களான அதானி பவர் லிமிடெட், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட், அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதானி போர்ட்ஸ் & சிஎஸ்இசட், அம்புஜா போர்ட்ஸ் & SEZ மற்றும் அம்புஜா ஆகியவற்றில் பங்குகளை வைத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் GQG பார்ட்னர்ஸ் நிறுவனம் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு ரூ.27,998.08 கோடியாக இருந்த நிலையில் இன்று ரூ.31,000 கோடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள அதானி குழுமத்தின் 10 நிறுவனப் பங்குகளின் நிலவரம்

அதானி எண்டர்பிரைசஸ் – 8.66 சதவீதம் உயர்வு

அதானி போர்ட்ஸ் & SEZ – 5.20 சதவீதம் உயர்வு

அதானி பவர் – 12.32 சதவீதம் உயர்வு

அதானி எனர்ஜி சொல்யூஷன் – 19.06 சதவீதம் உயர்வு (முன்பு இதன் பெயர் அதானி டிரான்ஸ்மிஷன்)

அதானி கிரீன் எனர்ஜி – 12.27 சதவீதம் உயர்வு

அதானி டோட்டல் கேஸ் – 20.00 சதவீதம் உயர்வு

அதானி வில்மார் – 9.96 சதவீதம் உயர்வு

ஏசிசி லிமிடெட் – 2.62 சதவீதம் உயர்வு

அம்புஜா சிமெண்ட்ஸ் – 4.22 சதவீதம் உயர்வு

NDTV – 11.73 சதவீதம் உயர்வு