காசாவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு

0
116

காசா பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை  சேர்ந்த நான்கு பேர்  பத்திரமாக நாட்டை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு குடும்பத்தைத் நாட்டிற்கு அனுப்புவதற்கான வசதிகள் அனைத்தையும் செய்துகொடுத்துள்ளதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச அமைப்பின் உதவி

நவம்பர் 24 அன்று நாட்டை வந்தடைந்த குறித்த குடும்பத்தினரை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக திங்கட்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு | Sri Lankans Stranded In Gaza Return To The Country

கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள், எகிப்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ரஃபா எல்லைக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீட்டுள்ளனர்.

மேலும் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் (IOM) உதவியுடன் நாடு திரும்பியவர்களுக்கான தளவாடங்கள் மற்றும் விமான போக்குவரத்து ஏற்பாடுகளை எளிதாக்கியதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஏற்பட்ட தாக்குதலின் தொடக்கத்திலிருந்து கெய்ரோ மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்பில் காசா பகுதியிலிருந்து மொத்தம் 15 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.