தனுஷின் கேப்டன் மில்லர் பாடல்! வரண்ட மண்ணும் குருதி குடிக்கும்; புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும்

0
166

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ்“வரண்ட மண்ணும் குருதி குடிக்கும்” என்ற பாடலை பாடியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படம் டிசம்பர் 15ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் பாடல் பாடியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது, ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில், “இந்த வரண்ட மண்ணும் குருதி குடிக்கும்… புழுவுக்கெல்லாம் விருந்து படைக்கும் ….

நாந்தாண்டா நீதி…. நாந்தாண்டா நீதி….” என்று குறிப்பிட்டு முதல் பாடல் வெளியாகவுள்ளதாகவும் இந்த பாடலை தனுஷ் பாடியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.