ரணிலின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு; ரணில் – பசில் இரகசிய பேச்சு

0
169

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான முன்மொழிவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிக்கொண்டவர் என்ற பெருமையுடன் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட முடியாத பட்சத்திலேயே இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பசில் ராஜபக்சவும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை ரணில் விக்கிரமசிங்கவிற்கு பெற்றுக்கொடுப்பது மற்றும் ஆதரவளிக்க மறுக்கும் கட்சியின் எம்பிக்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுத் தேர்தலில் தமக்கு ஆதரவாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள கட்சிகளின் ஆதரவை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

உத்தேச சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர், ரணில் விக்ரமசிங்கே மேலும் ஒரு வருட காலத்திற்கு அரச தலைவராக நீடிக்க அனுமதிக்கும் வகையில் இதனுல் புதிய சரத்தொன்றை உள்வாங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.