ஆபத்தான நிலையில் உள்ள வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி மேம்பாலங்கள் தொடர்பான அறிவுறுத்தல்

0
197

கொழும்பு – வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய இரயில் நிலையங்களுக்கு பிரவேசிப்பதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலங்கள் தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீடு இன்று இடம்பெறுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த இரு மேம்பாலங்களும் ஆபத்தான நிலையில் உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பகிறது.

இதன்படி குறித்த பிரதேசத்திற்கு தமது நிறுவனத்தின் குழுவொன்று அனுப்பிவைக்கப்படுமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்ட முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் தம்மிகா கஹஹேங்கோட தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நிலையில் உள்ள வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி மேம்பாலங்கள் தொடர்பில் கொழும்பு மாநகரசபை மற்றும் இரயில்வே திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இரு நிறுவனங்களுக்கும் தேவை ஏற்படும் பட்சத்தில் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாகவும் தம்மிகா கஹஹேங்கோட தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படாததன் காரணமாக இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று அனுப்பிவைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஆபத்தான நிலையில் உள்ள வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி மேம்பாலங்கள் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையினை வெளியிடுவதற்கும் நம்பிக்கை கொண்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் திட்ட முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் தம்மிகா கஹஹேங்கோட தெரிவித்துள்ளார்.