ஜனாதிபதி தேர்தலில் புட்டின் மீண்டும் போட்டி!

0
187

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளன.

நவம்பர் மாதத்தில் ஒரு பெரிய மாநாடொன்று ரஷ்யாவில் நடைபெறுகிறது. அப்போது தாம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து புட்டின் அறிவிக்கலாம் என்று புட்டின் நிர்வாகத்துக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் 24ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 1999 ஆம் ஆண்டின் கடைசி நாளில் போரிஸ் யெல்ட்சின் ஜனாதிபதி பதவியை புட்டினிடம் ஒப்படைத்தார்.

அதன் பிறகு மிக நீண்டகாலமாக ஜனாதிபதி பொறுப்பில் புட்டின் இருந்து வருகிறார். புட்டினுக்கு ஒக்டோபர் 7ஆம் திகதி 71 வயது ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.