இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு

0
184

2023 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று (03) அறிவிக்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

2023 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்புகள் நேற்று முன்தினம் 2 ஆம் திகதி தொடங்கின. அதன்படி நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Pierre Agostini, ஜெர்மனியின் Ferenc Krausz, ஸ்வீடனின் Anne L’Huillier ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.