பாம்புகளை கொன்று உண்ணும் மார்க்கோர் ஆடுகள்!

0
206

பாகிஸ்தான தேசிய விலங்கு மார்கோர் என்ற காட்டு ஆடு பாம்புகளை கொன்று உண்ணும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

மார்க்கோர் என்பது பாரசீகச் சொல் என்பதுடன் பாம்புகளை உண்பவன் அல்லது பாம்புகளைக் கொல்பவன் என்பது அதன் அர்த்தமாகும்.

இந்த விலங்கு அதன் நீண்ட வளைந்த கொம்புகளுடன் பாம்புகளைக் கொன்று உண்ணும் திறன் கொண்டது என பாகிஸ்தான் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன.

பாம்பு தீண்டிய பின்னர் அந்த விஷத்தை அகற்ற மார்க்கோர் காட்டு ஆட்டின் உறுப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகள் உதவும் எனவும் கூறப்படுகிறது.

எனினும் மார்க்கோர் என்ற இந்த ஆடு பாம்புகளை சாப்பிட்டதாகவோ அல்லது பாம்புகளை கொம்புகளால் கொன்றதாகவோ ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

Markor Goat

ஆனால், மார்க்கோர் ஆடுகள் இருக்கும் இடத்தில் பாம்புகள் இருக்காது என பாகிஸ்தான் மக்கள் நம்புகின்றனர். சார்லஸ் டார்வினும் தற்போது நம்மோடு இருக்கும் ஆடுகள் மார்க்கோரிலிருந்து உருவாகியிருக்கலாம் என ஊகித்தார்.

மார்க்கோர் மிகவும் பலம் பொருந்திய ஆடு, 6 அடி உயரம், 110 கிலோ கிராம் வரை எடை கொண்டது. இது தாடையிலிருந்து வயிற்றின் அடிப்பகுதி வரை நீண்டு செல்லும் அடர்த்தியான கன்னத்தை இந்த ஆடு கொண்டுள்ளது.

வட இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முதல் துர்கிஸ்தான் வரை 2 ஆயிரம் முதல் 11 ஆயிரத்து 800 அடி உயரமான மலைகளில் மார்க்கோர் ஆடுகள் வாழ்கின்றன.

இந்த ஆடுகள் சைவ உணவை உண்பவை என்பதுடன் பொதுவாக குழுக்களாக வாழ்கின்றன. ஒரு மந்தையில் சுமார் 9 ஆடுகள் இருக்கும். எனினும் மனிதனி வேட்டையாடுதல் காரணமாக மார்க்கோர் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த ஆடுகளின் தனித்துவமான கொம்புகளுக்காக அவை வேட்டையாடப்படுகின்றன.

Markor Goat