கூகுளின் 25 ஆம் ஆண்டு பிறந்ததினம்!

0
265

இன்றைய டூடுல் கூகுளின் 25வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இங்கே கூகுளில் இருக்கும் போது நாங்கள் எதிர்காலத்தை நோக்கியவர்களாக இருக்கிறோம் பிறந்தநாளும் பிரதிபலிக்கும் நேரமாக இருக்கும்.

கூகுல் பிறந்த கதை

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்ற இன்றைய கூகுளின் ஆரம்பம் பற்றி நோக்குவோம். முனைவர் பட்ட மாணவர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகிய இருவரும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் திட்டத்தில் இணைந்து செயற்பட்டனர்.

செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகிய இருவரும் ஒரே சிந்தனையுடன் பயணித்தவர்கள். அவர்களுடைய சிந்தனையாக உலகளாவிய வலையமைப்பை இலகுவில் அணுகக்கூடிய மற்றும் சிறந்த தேடுபொறிக்கான முன்மாதிரியை உருவாக்குவதே பிரதான நோக்கமாக காணப்பட்டது.

செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் இருவரும் தங்களுடைய தங்கும் அறைகளில் இருந்து அயராது உழைத்ததால் அவர்கள் முயற்சித்த திட்டத்தில் வெற்றி கண்டனர். அவ்வெற்றியாக (27.09.1998) அன்றைய தினம் Google Inc.

உத்தியேபகப்ப்பூர்வமாக பிறந்தது. தற்போது டூடுலில் காணப்பட்ட எங்கள் லோகோ மதத்திரமே மாற்றமடைந்துள்ளது. ஆனால் ஆரம்பிக்கும் போது நோக்கமாகக் உலகத் தகவலை ஒழுங்கமைத்து அதை உலகளவில் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும் எனும் நோக்கம் நிறைவுற்று வெற்றியளித்துள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து பில்லியன் கணக்கான மக்கள் தேட, இணைக்க, வேலை செய்ய, விளையாட மற்றும் பலவற்றிற்கு Google ஐப் பயன்படுத்துகின்றனர்.