ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் இணைந்த சிவகார்த்திகேயன்

0
231

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்.கே23 படத்தில் நடிக்கவுள்ளார். மாவீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த கூட்டணி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பினை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பிறந்தநாளில் வாழ்த்துக்களுடன் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சேர். எனது 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.