தெருக்களில் வழிந்தோடிய ஒயின்

0
224

நகரத்தில் உள்ள மலையிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் ஒயின் கீழே பாய்ந்து தெருக்களில் வழிந்தோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரத்தின் சாலைகளில் ஒயின் ஆறாக ஓடிய காட்சியின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவுகின்றன.

20 இலட்சம் லீற்றருக்கு அதிகமான சிவப்பு ஒயின் கொண்ட பீப்பாய்கள் ஏற்றிச் சென்ற வாகனம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதால் இந்த ஒயின் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செர்டிமா நதி ஓயின் நதியாக மாறுவதற்கு முன் ஒயின் வெள்ளத்தைத் தடுக்க தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். பெருக்கெடுத்து ஓடிய ரெட் ஒயின் வெள்ளம் வேறு திசையில் திருப்பிவிடப்பட்டு அருகிலுள்ள வயல்வெளியில் பாயச் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வினோதமான சம்பவத்திற்கு மதுபான நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளதுடன் நகரத்தில் ஒயின் வெள்ளம் பாய்ந்த இடங்களை சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்பதாகவும் உறுதியளித்துள்ளது.