பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த நடிகர் பிரபுதேவா

0
281

திரைப்பட படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவா பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வௌியிட்டுள்ளது. சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கின்றார்.

குறித்த படத்திற்கான பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்கு பிரபுதேவா இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.