தன் உயிரை தியாகம் செய்து இந்திய ராணுவ வீரர்களை பாதுகாத்த நாய்!

0
179

இந்திய இராணுவத்தின் நாய்களுக்கான 21வது படைப்பிரிவைச் சேர்ந்தது லாப்ரடோர் வகை பெண் நாய் ‘கென்ட்’. கடந்த சில நாட்களாக இந்த நாய் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்துக்கு உட்பட்ட நர்லா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே (12.09.2023)ஆம் திகதி துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

அப்போது படை வீரர்களைக் காப்பாற்ற முற்பட்டபோது தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கென்ட் எனப்படும் இராணுவ நாய் உயிரிழந்தது.

இதுகுறித்து ஜம்முவை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான லெப்டினன்ட் கர்னல் சுனில் பக்ட்வால் கூறும்போது, ரஜோரி மாவட்டத்தில் ‘ஆபரேஷன் சுஜாலிகலா’ எனும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை இராணுவம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் நாய்களுக்கான 21வது படைப்பிரிவைச் சேர்ந்த கென்ட் என்னும் மோப்பநாயும் ஈடுபடுத்தப்பட்டது.

இறுதிச் சடங்கு

உயிர் தியாகம் செய்து இந்திய இராணுவ வீரர்களை காத்த நாய் | Dog Protected The Soldiers Of The Indian Army

தப்பியோடிய தீவிரவாதிகளைத் துரத்திப் பிடிக்க முற்பட்டபோது கடுமையான துப்பாக்கிச் சூட்டிற்கு அது இலக்கானது.

இருப்பினும், தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து இராணுவ வீரர்களைப் பாதுகாக்க முற்பட்ட நிலையில் இந்திய இராணுவத்தின் சிறந்த மரபின்படி கென்ட் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளதாகவே கருதப்பட்டது என தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இரையான நாய் கென்ட்டின் இறுதிச் சடங்கில் ஏராளமான இராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.