உறவு மனித மனத்தின் மாமருந்து! பெற்றோரை சந்தித்த விஜய்

0
188

நடிகர் விஜய் தனது பெற்றோரை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தனது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரையும், அம்மாவையும் நேரில் சந்தித்து நடிகர் விஜய் நலம் விசாரித்துள்ளார்.

மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் ‘உறவும், பாசமும் மனித மனத்தின் மாமருந்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஓரிரு வாரங்களில் லியோ இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

படப்பிடிப்பு வேலைகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த விஜய் நேற்று முன்தினம் சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், பெற்றோரை சந்தித்திருப்பது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.