ஆரோக்கியத்திற்கு ருசியான மிளகு குழம்பு..!

0
239

மிளகு நம் செரிமானத்தை சீர்செய்து குடலை வலுப்படுத்தி, வாயு தொல்லை, அஜீரணம் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.

மிளகு நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கும், நெஞ்சு சளியை போக்கும், புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த மிளகில் சுவையான மற்றும் ஆரோக்கியமான மிளகு குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருள்

  • மிளகு – 50 கிராம்
  • வரமிளகாய் – 4
  • உளுத்தம் பருப்பு
  • சீரகம் – 4 ஸ்பூன்
  • கடுகு – 1 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • பெருங்காயம் – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • புளி – எலுமிச்சை அளவு
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
pepper/மிளகு

செய்முறை 

கடாயில் எண்ணெயை சூடாக்கி, மிளகு மற்றும் வரமிளகாய், உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் அனைத்தும் சேர்த்து அதை நன்கு வறுக்க வேண்டும்.

வறுத்ததை நன்கு ஆற விட்டு மிக்ஸியில் போட்டு அதோடு புளியை அப்படியே சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு அனைத்தையும் மைபோல அரைத்துக் கொள்ளவேண்டும்.

மீண்டும் கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு தாளித்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு கிளறவேண்டும்.

இதை நன்கு கொதிக்கவிடவேண்டும். குழம்பு திக்காகி அதில் உள்ள எண்ணெய் பிரிந்து வரும்போது குழம்பை இறக்கிவிட வேண்டும்.

ருசியான, மணக்கும் மிளகுக் குழம்பு சாப்பிட தயாராக உள்ளது. இதை சூடான சோற்றில் மட்டுமே பிசைந்து சாப்பிட வேண்டும்.