ஒன்று சேர்ந்த ஜூலி, ஓவியா! பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி; வெளியான அசத்தல் ப்ரோமோ

0
288

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி பிக்பாஸ் ரசிகர்களுக்கும் விருந்து கொடுத்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். மிக விரைவில் அடுத்த சீசன் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் ஓவியா, ஜுலி மற்றும் பிற பிக் பாஸ் போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டுக்குள் எலியும், பூனையுமாக சண்டை போட்டுகொண்டு, எதிரெதிர் துருவமாக இருந்த ஜூலி மற்றும் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிதாக வெளியே தலைகாட்டவில்லை.

இந்த நிலையில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது. இது குறித்த ப்ரோமோவை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.