எனது மகன் விராட் கோலியைப் பின்பற்றுவார் என நம்புகிறேன்: மே.தீவு அணி வீரர் ஜோஷுவாவின் தாயார்

0
275

இந்திய அணி வீரர் விராட் கோலியை மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளரான ஜோஷுவா டி சில்வாவின் தாயார் நேரில் சந்தித்து நெகிழ்ச்சியடைந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

அதற்கமைய அண்மையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் காப்பாளரான ஜோஷுவா டி சில்வா விராட் கோலி சதமடிக்க வேண்டுமெனவும் அவரை சந்திக்க தனது தாயார் வந்திருப்பதாகவும் விராட்டிடம் தெரிவித்தார்.

போட்டி முடிந்தப் பிறகு ஜோஷுவா டி சில்வாவின் தாயார் விராட் கோலியை சந்தித்துள்ளார்.

விராட் கோலி சந்தித்து ஆனந்த கண்ணீருடன் அவர் கூறியதாவது:

‘நான் எனது மகனை பார்க்க வரவில்லை, ஏனெனில் அவனை நான் தினமும் பார்க்கிறேன். நான் இன்று விராட் கோலியை பார்க்க மட்டுமே வந்திருக்கிறேன்.

இப்போதுதான் விராட் கோலியை முதன்முறையாக சந்திக்கிறேன். அவர் அழகான அற்புதமான மனிதர், அவரும் எனக்கு மகன் போலதான்.

விராட் கோலி திறமையான விளையாட்டு வீரர். விராட் கோலி போலவே எனது மகனும் சிறப்பாக விளையாடுவாரென நம்புகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி தனது 29 ஆவது சதத்தை பதிவு செய்தார்.

அத்துடன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி பெற்ற 76ஆவது சதமாக இது பதிவாகியுள்ளது.

மேலும் இவர் விளையாடும் 500ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இந்த 76ஆவது சதத்தை விராட் கோலி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.