இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து மோடியிடம் பேசுவேன்: டக்ளஸ்

0
155

ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தின் போது, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் மற்றும் அவர்களின் இழுவை மடித்தொழில் முறை பற்றி இந்தியப் பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரஸ்தாபித்து உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் வோனந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் நேற்று (19.07.2023) அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பில் மோடியுடன் பேசுவேன்: டக்ளஸ் | Douglas Talks To Modi About Fishermen

தொழில்சார் பிரச்சினைகள்

இதன் போது கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சரிடம், இந்திய இழுவைப் படகுகளால் தமது கடல் வளம், மீன் பிடி உபகரணங்கள் என்பன அழிக்கப்படுவதாகவும், அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால் அமைச்சர் ஜனாதிபதியுடன் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது இந்தியப் பிரதமர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளிடம் இப் பிரச்சினை தொடர்பாகப் பேசி இந்திய இழுவைப் படகுகளின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

அத்துடன், இம்முறை இந்திய விஜயத்தின் போது கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற தலைவரும் சிறந்த இராஜதந்திரியுமான எமது ஜனாதிபதியின் பங்களிப்பும் இவ்விடயத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

வட பகுதி கடற்றொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை மிகவும் ஆர்வத்துடன் செவிடு மத்த அமைச்சர், வட பகுதி கடற்றொழிலாளர்களுக்காக தான் கடற்றொழில் அமைச்சராக இருக்கும் காலத்தில் மட்டுமல்லாமல், கடந்த காலங்களிலும் தொடர்ச்சியாக அவர்களுக்காகக் குரல் கொடுத்து வந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் அவர்களுக்காகக் குரல் கொடுக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்..

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் தொடர்பில் மோடியுடன் பேசுவேன்: டக்ளஸ் | Douglas Talks To Modi About Fishermen

இந்திய கடற்றொழிலார்களின் அத்துமீறல்கள்

மேலும், சக தமிழ் தரப்புக்கள் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகப் பேசி வருவதாகவும் ஆனால் வட பகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் அவர்கள் ஒருபோதும் பேசுவதில்லையெனவும் கூறியுள்ளார்.

மேலும், இந்திய கடற்றொழிலார்களின் அத்துமீறல்கள் தொடர்பாக அவர்கள் இந்திய தூதரகத்துடன் பேசலாம் அல்லவா? எனவும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், இம்முறை இந்திய விஜயத்தின் போது கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிர்ந்தர தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற தலைவரும் சிறந்த இராஜதந்திரியுமான எமது ஜனதிபதியின் பங்களிப்பும் இந்த விடயத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்குமெனவும் தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.