இலங்கையில் மரணத்திலும் நால்வரை வாழவைத்த பெண்!

0
212

காலி- உடுகம வைத்தியசாலையில் உயிரிழப்பதற்கு முன்னர் உடல் உறுப்புக்களை தானம் செய்து நான்கு பேரை வாழ வைத்த பெண் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவரின் கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் நான்கு பேருக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக பெறப்பட்டதாக உடுகம வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சுசந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மூளைச்சாவு அடைந்த பெண்

அதேவேளை உடுகம வைத்தியசாலை வரலாற்றில் மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரிடமிருந்து உறுப்புகள் சேகரிக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என வைத்திய அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

இலங்கையில் மரணத்திலும் நால்வரை வாழவைத்த பெண்; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! | A Woman Who Kept Four People Alive In Sri Lanka

சம்பவத்தில் 2/169, நயதொல, அலபலதெனியவில் வசிக்கும் எல்.பிரேமாவதி என்பரே தனது உடல் உறுப்புகளை வழங்கியுள்ளார் .

உயிரிழந்தவரின் உறுப்புகள் பிக்கு ஒருவர் உட்பட மூவருக்கு மாற்று சிகிச்சைக்காக தேசிய உறுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

உடல் உறுப்புகள் தானம்

இலங்கையில் மரணத்திலும் நால்வரை வாழவைத்த பெண்; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்! | A Woman Who Kept Four People Alive In Sri Lanka

மூளைச்சாவு அடைந்த பெண் உறுப்புகளைப் பெறுவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை உறுதிப்படுத்தியதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பிரேமாவதி சுகயீனம் காரணமாக மூளை நரம்பு வெடித்து இரத்தம் கசிந்ததால் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன்போது மூளைச்சாவுடைந்துள்ளமையினால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவமானது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.