பாகிஸ்தானில் தாக்கியழிக்கப்பட்ட இரண்டு இந்துக்கோவில்கள்..பின்னணி

0
194

பாகிஸ்தானில் இரண்டு இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அதில் ஒரு கோவில் மீது ரொக்கட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இந்துக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் இராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் 

அதேபோன்று சிந்து மாகாணத்தின் காஷ்மோர் நகரில் உள்ள ஒரு கோவில் மீது நேற்று இனந்தெரியாதவர்கள் ரொக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னணி

பாகிஸ்தானில் தாக்கியழிக்கப்பட்ட இந்துக்கோவில்கள் | Hindu Temple In Pakistan Was Demolished

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சீமா என்ற பெண்ணுக்கும், இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்ற வாலிபருக்கும் பப்ஜி விளையாட்டு மூலம் காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து 4 குழந்தைகளுக்கு தாயான சீமா, கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, காதலர் வாழ்ந்து வந்தார்.

இவர்கள் இருவரையும் கடந்த 4-ம் திகதி பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே சீமா பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஓடிய விவகாரத்தில் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என உள்ளூரை சேர்ந்த ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்கள் அண்மையில் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.