சிவசேனையின் தலைவரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!

0
191

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நிறைவு செய்து திரும்பும்போது தென்மராட்சி மறவன்புலவுவில் உள்ள சிவசேனையின் தலைவரது இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.

இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனவுக்கும், யாழ் மாவட்ட இந்துமத குருமார்கள் மற்றும் இந்துமத அமைப்புகள் இடையிலான சந்திப்பொன்று ஜுன் 29ம் திகதி இடம்பெற்றது. இதன்போது பாபர் மசூதிகளை இந்து பிரதேசங்களில் உருவாக்கதீர்கள்.

தையிட்டியில் உருவானது ஒரு பாபர் மசூதி, அதை கட்டிய பிக்குவின் ஆடையை களைய வேண்டியது உங்கள் கடமை என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.