கனடாவில் விற்பனை செய்யப்படும் பெர்ரி குறித்து எச்சரிக்கை

0
223

கனடாவில் விற்பனை செய்யப்படும் பிளக்பெர்ரி வகையொன்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட பிளக்பெர்ரி வகைகளில் பக்றீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த வகை பெர்ரி பழங்களை சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்படும் பெர்ரி வகைகள் பிரிட்டிஸ் கொலம்பியாவிலும் விற்பனை செய்பய்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பக்டீரியா வகைகளினால் உடலுங்கு தீங்கு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகை பெர்ரி பழங்களை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹோல் புட்ஸ் மார்கட் 365 (Whole Foods Market’s 365 brand organic frozen blackberries) பண்டக்குறியைக் கொண்ட ப்ரோசன் பிளக்பெர்ரி வகைகளே இவ்வாறு பக்றீரியா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.