வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வச்சந்நிதியான் கோயில்; கடல் நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு!

0
215

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், இவ்வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப் பெருமானுக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு நடுநிசி இரவு 12 மணியளவில் ஆலய பூசகர்கள் பெருங்கடலும் தொண்டமானாறு வாவியும் இணையும் இடத்திற்கு சென்று வெள்ளை துணியினால் வாய் கட்டப்பட்ட மண் குடத்தில் கடல் நீர் எடுத்து வந்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க செல்வச்சந்நிதியான் ஆலய ஆடி குளிர்த்தி; கடல்நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு! | Selvachannidhiyan Temple Sea Water Lamp

விசேடபூஜை வழிபாடுகள் 

அதன் பின்னர் விசேடபூஜை வழிபாடுகள் நடாத்தி ஆலய மூலஸ்தானத்தில் வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரையான ஒரு வார காலத்திற்கு கடல் நீரில் விளக்கெரித்து பொங்கல் பொங்கும் சம்பிரதாயபூர்வ வைபவம் இடம் பெறவுள்ளது.

இதற்காக நேற்று முன்தினம் இரவு பெருங்கடலுக்குச் சென்று கடல் நீர் எடுத்து வந்து விளக்கு எரிக்கும் வைபவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் கடல்நீரில் தீபம் எரியும் காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க செல்வச்சந்நிதியான் ஆலய ஆடி குளிர்த்தி; கடல்நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு! | Selvachannidhiyan Temple Sea Water Lamp