சில நாடுகளின் சுவாரசியமான உணவுகள்…

0
284

ஒவ்வொரு நாட்டிற்கும் தேசிய கீதம் , தேசிய விலங்கு, தேசிய மரம் என்று இருப்பதை போல தேசிய உணவும் உள்ளது.

அந்தவகையில், ஒரு நாட்டில் அதிகமாக மக்கள் விரும்பும் அல்லது அதிகமாக கிடைக்கும் உணவுகள் அந்த நாட்டின் சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக அதனையே தேசிய உணவு என கூறுகின்றனர்.

இந்தியா

உலக நாடுகள் சிலவற்றின் சுவாரசியமான தேசிய உணவுகளைப் பற்றி தெரியுமா...! | Some Interesting National Dishes Around The World

அந்தவகையில், இந்தியாவை பொறுத்தவரை இந்தியர்கள் எந்த நாட்டிற்கு சென்று எத்தனை உணவு வகைகளை சுவைத்தாலும் பிரியாணி மீதான மோகம் மட்டும் குறையாது.

சீராக சம்பா பிரியாணி, முகலாய பிரியாணி, ஹைதிராபாதி பிரியாணி என்று வகை வகையாக பிரியாணிகள் இந்தியாவில் உள்ளது.

பங்களாதேஷ்

உலக நாடுகள் சிலவற்றின் சுவாரசியமான தேசிய உணவுகளைப் பற்றி தெரியுமா...! | Some Interesting National Dishes Around The World

அடுத்து பங்களாதேஷ் நாட்டில் இலிஷ் என்ற உணவு தான் பிரபலமானது.

அதாவது, மீன் வாழை இலையில் மசாலாவோடு வைக்கப்பட்டு வேக வைக்கப்படுகிறது. மீனை சமைத்த பிறகு, அதை சோறுடன் சேர்த்து சாப்பிடுகின்றனர்.

இதுவே இங்கு அதிக மக்களால் உண்ணப்படுகிறது.

சீனா

உலக நாடுகள் சிலவற்றின் சுவாரசியமான தேசிய உணவுகளைப் பற்றி தெரியுமா...! | Some Interesting National Dishes Around The World

சீனாவில் பெக்கிங் வாத்து கரி தான் பிரபலமான உணவாக உள்ளது.

மால்டோஸ் சிரப் ஊற்றி மெருகூட்டப்பட்ட வாத்து பழுப்பு நிறமாக மாறும் வரை அடுப்பில் வறுக்கப்பட்டு மேலே சர்க்கரை – பூண்டு சாஸ் ஊற்றி கொடுக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான்

உலக நாடுகள் சிலவற்றின் சுவாரசியமான தேசிய உணவுகளைப் பற்றி தெரியுமா...! | Some Interesting National Dishes Around The World

அடுத்ததாக ஆப்கானிஸ்தான் நாட்டில் காபுலி புலா எனப்படும் உணவு பிரபலமாக இருக்கிறது.

ஆட்டு இறைச்சி குழம்பு வைத்து வேகவைக்கப்பட்ட நீண்ட பாசுமதி அரிசி, வகை வகையான பருப்பு, கரட் போட்டு வேகவைத்து, மேலே நெய்யில் வறுத்த திராட்சை, பொடியாக்கிய பாதாம், முந்திரி பருப்புகள் போட்டு இறக்கி பரிமாறுகிறார்கள்.

இத்தாலி

உலக நாடுகள் சிலவற்றின் சுவாரசியமான தேசிய உணவுகளைப் பற்றி தெரியுமா...! | Some Interesting National Dishes Around The World

இத்தாலி நாட்டு உணவு என்று சொன்னதுமே நமக்கு தோன்றுவது பாஸ்தா, பீட்ஸா, மாட்டிறைச்சி அல்லது எதாவது ஒரு இறைச்சியை வைத்து அதன் மேலே சீஸ் மற்றும் தக்காளி சாஸ் ஊற்றி அடுக்கி வேகவைக்கும் லசாக்னா.

இப்படியான உணவுகளையே இத்தாலிய நாட்டு மக்கள் அதிகம் விரும்பி சுவைக்கின்றனர்.

இந்தோனேசியா

உலக நாடுகள் சிலவற்றின் சுவாரசியமான தேசிய உணவுகளைப் பற்றி தெரியுமா...! | Some Interesting National Dishes Around The World

இந்தோனேசியாவில் பிரபலமான உணவு நாசி கோரெங் என்பதாகும்.

வறுத்த அரிசியுடன், இறால், வெங்காயம் மற்றும் சோயா சாஸ் கலந்து கிளறி, வறுத்த முட்டையுடன் பரிமாறப்படும்.

கொரியா

உலக நாடுகள் சிலவற்றின் சுவாரசியமான தேசிய உணவுகளைப் பற்றி தெரியுமா...! | Some Interesting National Dishes Around The World

கொரிய நாட்டு மக்களின் உணவு காட்சிகளில் எல்லாம் பொதுவாக இருப்பது இந்த கிம்சி தான்.

முட்டைக்கோஸ், முள்ளங்கி அல்லது வெங்காயம் போன்ற காய்கறிகளை பிரதானமாக வைத்து இது செய்யப்படுகிறது.

இஞ்சி, மிளகாய் தூள், பூண்டு, மீன் எண்ணெய், கொண்டு ஊறவைக்கப்படும், நம்ம நாட்டில் உள்ள ஊறுகாய் போன்று இதை சொல்லலாம்.

பிலிப்பைன்ஸ்

உலக நாடுகள் சிலவற்றின் சுவாரசியமான தேசிய உணவுகளைப் பற்றி தெரியுமா...! | Some Interesting National Dishes Around The World

பிலிப்பைன்ஸ் நாட்டில் கிடைக்கும் சிக்கன் அடோபோ சுவையில் தனி சிறப்பு எனக் கூறப்படுகிறது.

கோழியை பூண்டு மற்றும் வினிகரில் மாரினேட் செய்து எண்ணெயில் வறுத்து, சிக்கன் குழம்பில் போட்டு வேகவைக்கப்படுகிறது.

பாரம்பரியமாக அரிசி சோறுடன் இது பரிமாறப்படுகிறது.