IMFன் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை தொடர்ந்தும் பின்னடைவு…!

0
158

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை தொடர்ந்தும் பின்னடைந்து காணப்படுவதாக வெரிடே ரிசர்ச் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் நீண்ட கால கடன் சலுகையொன்றை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

100 விடயங்கள் அடங்கிய பட்டியல்

எனினும் அதற்கு முன்னர் உள்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களாக 100 விடயங்களை பட்டியலிட்டு அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த மார்ச் தொடக்கம் மே மாதம் வரையான காலப் பகுதிக்குள் குறித்த நிபந்தனையின் 29 வீதம் மட்டுமே அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த நிபந்தனைகளை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.