இலங்கையின் முதலாவது ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு சிப்ஸ்

0
212

இலங்கையின் முதலாவது ஏற்றுமதி சார்ந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் பதப்படுத்தும் தொழிற்சாலை பண்டாரவளையில் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு புதிய தொழிற்சாலைக்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சர்வதேச சந்தைக்குள் இலங்கை செல்லும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உலகளவில் உருளை சிப்ஸின் மொத்த பெறுமதி சுமார் 30பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது. சுமார் 21 பில்லியன் ரூபாய் பெறுமதியான உருளைக்கிழங்கு சிப்ஸ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது.

குறித்த ஏற்றுமதி நிறுவனத்தின் வெற்றியானது மேலதிக உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதுடன் இறக்குமதியை குறைப்பதற்கும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.