மிஸ்ஸிசாகுவாவின் 36 ஆண்டுகால மேயர் தனது 101ம் வயதில் மரணம்

0
328

மிஸ்ஸிசாகுவா நகரின் மேயராக 36 ஆண்டுகள் கடமையாற்றிய ஹாஸில் மெக்கெலியன் தனது 101ம் வயதில் காலமானார்.

மிக நீண்ட காலமாக மேயராக கடமையாற்றிய மெக்கெலியன் அமைதியான முறையில் இளைப்பாறினார் என மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

பொதுச் சேவையின் மெய்யான வரைவிலக்கமாக மெக்கெலியன் திகழ்கின்றார் என போர்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.

நகரின் வரலாற்றல் மிக நீண்ட காலமாக மேயராக கடமையாற்றியவர் என்ற பெருமை மெக்கெலியனைச் சாரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மிஸ்ஸிசாகுவாவின் மாற்றத்தின் முன்னோடியாக அவர் கடமையாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மெக்கெலியனின் பாசறையில் பாடங்களை கற்றுக் கொண்டதாகவும் சிறந்த வழிகாட்டியதாக அவர் திகழ்ந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மெக்கெலியனின் மறைவிற்காக பல்வேறு தரப்பினரும் இரங்கல்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.