வெளியில் செல்லும் பெண்கள் அவதானம்; அதிகரிக்கும் வழிப்பறி (VIDEO)

0
437

வத்தளை – ஹேக்கித்த பகுதியில் பெண்ணொருவரை தாக்கி தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் அறுத்துச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் வத்தளை – ஹேக்கித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பெண் ஒருவர் தனது குழந்தையை பாடசாலைக்கு வீதியில் அழைத்துச்சென்ற போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் குறித்த பெண்ணின் தாக்கி சங்கிலியை அறுத்துச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள்,நகை,பணம் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகிய வண்ணம் உள்ளது.

எனவே தற்போதைய பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்திற்கொண்டு வெளியில் செல்லும் பெண்கள் நகைகளை அணிந்து செல்வதினை தவிர்த்து வந்தால் இவ்வாறான சம்பவங்களிலிருந்து பாதுகாக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

viedo source from Lanka sri