யாழில் மூக்கு கண்ணாடி கடையில் போதைப்பொருள் விற்பனை!

0
200

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மூக்கு கண்ணாடி கடையின் உரிமையாளர் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதானவர் 35 வயானவர் என கூறப்படுகின்றது. குருநகரை சேர்ந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரது போதைப்பொருளை விற்பனைக்காக மூக்கு கண்ணாடி கடையில் தயார் செய்யப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குருநகர் போதைப்பொருள் வியாபாரி தற்போது தலைமறைவாக உள்ளார்.

அதேவேளை யாழில் அண்மைகாலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதுடன் இதனால் உயிரிழப்புக்களும் பதிவாகி வருகின்றமை மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.