முதல் விமானத்தில் பயணத்திற்கு தந்தையிடம் ஆசி பெற்ற பெண் விமானி! நெகிழ்ச்சி வீடியோ

0
278

தனது முதல் விமான பயணத்திற்கு முன்னர் தனது தந்தையிடம் பெண் விமானி ஒருவர் ஆசீர்வாதம் பெற்ற காணொளி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேப்டன் க்ருடாட்னியா ஹேல் எனும் பெண் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 7-ம் திகதி ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.

முதன்முதலில் ஓடிய விமானத்தில் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்ற பெண் விமானி! நெகிழ்ச்சி காணொளி | Female Pilot Got Blessings Her Father First Flight

விமானி பயிற்சியை முடித்த கேப்டன் க்ருடாட்னியா ஹேல் தனது முதல் பயணத்துக்கு முன்பு தனது தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.

விமானியாக ஆன பின்னர் மகிழ்ச்சியுடன் பயணியாக வந்திருக்கும் தனது தந்தையை கேப்டன் க்ருடாட்னியா ஹேல் அணைத்துக் கொள்கிறார். இதனை கண்ட சக பயணிகள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

முதன்முதலில் ஓடிய விமானத்தில் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்ற பெண் விமானி! நெகிழ்ச்சி காணொளி | Female Pilot Got Blessings Her Father First Flight

இந்த காணொளி இதுவரையில் 8.3 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. விமானி கமராவை பார்த்து கையசைப்பதில் துவங்கும் இந்த காணொளியில் பின்னர் ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் தனது தந்தையிடம் சென்று ஆசீர்வாதம் பெறும் காட்சிகள் பார்ப்போரை உணர்ச்சிவசப்பட செய்திருக்கிறது. 

மேலும், அந்த வீடியோவில் ஹேல்,”எப்போதும் என் பெற்றோரின் ஆசீர்வாதமின்றி என் வீட்டை விட்டு வெளியேறுவதில்லை.

பயிற்சி காலத்தில் சில சமயங்களில் நான் அதிகாலை 3-4 மணிக்கு வீட்டை விட்டு புறப்படுவேன். என் பெற்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பர்.

அப்போதும் அவர்களது கால்களைத் தொடாமல் வீட்டை விட்டு வெளியேறுவது இல்லை. அப்படி செய்யாவிட்டால் நாள் முழுமையடையாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.