ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச்செல்லவில்லை! ரணிலுக்கு சஜித் பதிலடி

0
496

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு தாம் அனுப்பிய கடிதம், தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சித் தலைவர்தான், மே 12ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் எழுதியதை மறந்துவிட்டார். அந்தக் கடிதத்தில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க பிரதமர் பதவியை பொறுப்பேற்கத் தயார் என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி எழுதிவிட்டு, ஏன் என்னை இவர்கள் குறைக்கூற வேண்டும்” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

இதற்கு இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து பதிலளிக்கும் போதே சஜித் பிரேமதாச குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவிற்கு அனுப்பிய கடிதம்

மேலும் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு தாம் அனுப்பிய கடிதம், தாம் தனிப்பட்ட ரீதியில் அனுப்பிய கடிதம் அல்ல. எமது நாடாளுமன்றக்குழுவின் அனைவரும் இணைந்து அனுப்பிய கடிதம்.

அந்த கடிதத்தில் தேர்தல் உட்பட்ட 5 விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது. இதனை விடுத்து, எமக்கு பிரதமர் பதவிவேண்டும் என்று ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச்செல்லவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.