கிரீஸ் தலைநகர் ஆரஞ்சு நிறத்தில் மாறியது ஏன்? என்ன நடந்தது?

0
30

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் முழுவதும் ஆரஞ்சு வண்ணத்தில் காட்சியளிக்கிறது. சஹாரா பாலைவனத்தில் இருந்து அதிகளவில் தூசிகள் வீசியதே இதற்குக் காரணம். இதனால் கிரீஸின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

புகழ்பெற்ற அக்ரோபோலிஸ் கோட்டையைப் பார்க்க முடியாத அளவுக்குப் புழுதி நிறைந்துள்ளது. சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் வெளிப்புறங்களில் நேரம் செலவிடுவதைக் குறைத்துக் கொள்ளவும் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிரீஸ் ஏற்கெனவே மார்ச் மாத இறுதியில் இதே பாதிப்பை எதிர்கொண்டது. அப்போது சுவிட்சர்லாந்து, பிரான்ஸின் தெற்குப் பகுதியிலும் புழுதி பரவியது. சஹாரா பாலைவனம் ஆண்டுக்கு 60 முதல் 200 மில்லியன் டன் வரையிலான கனிம தூசுகளை வெளியிடுகிறது.

இவற்றில் பெரும்பாலானவை உடனடியாக நிலத்தில் தங்கிவிடுகின்றன. எனினும், ஒருசில சிறு துகள்கள் நீண்ட தூரத்திற்குப் பயணிக்கின்றன. சில நேரங்களில் ஐரோப்பாவையும் அடைகின்றன.