தமிழர்களை கொன்ற படைகள் மூலம் சிங்கள இளைஞர்களை கொல்ல ஆணை..! சபையில் குற்றச்சாட்டு

0
26

தமிழர்களை கொலை செய்த படைகளை கொண்டு சிங்கள இளைஞர்களை கொலை செய்யும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு படைகளுக்கு வர்த்தமானி ஊடாக ஆணை வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் சிங்கள இளைஞர்களை கொலை செய்யும் வாசற் கதவை அவர் திறந்து விட்டுள்ளார், இதனை சிங்கள மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.