சமஷ்டி மட்டுமே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் – விக்னேஸ்வரன்

0
489

சமஷ்டி அரசியலமைப்பே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சமஷ்டி மட்டுமே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் | Samashti Alone Will Give Freedom To Tamils

 இராணுவத்தினருக்கு அளவுக்கதிகமான நிதி 

“வரவு செலவுத் 530 பில்லியன் ரூபா பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அளவுக்கதிகமான இராணுவத்தினருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர மக்களுக்காக அல்ல.

2009 க்கு பின்னர் இராணுவத்தினருக்கான செலவு குறையும் என்று எதிர்பார்த்தாலும் ஒவ்வொரு வருடமும் இது அதிகரித்துக்கொண்டே போகின்றது. கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு குறைந்தளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமஷ்டி மட்டுமே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் | Samashti Alone Will Give Freedom To Tamils

இது குறித்து பெரும்பான்மை சமூக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது இது தொடர்பில் கேள்வியெழுப்புகின்றனர். மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாதுகாப்பு செலவீனம் வருடாந்தம் அதிகரிக்கின்றது.

இவ்வாறு பாதுகாப்புக்கான செலவீனம் அதிகரிப்பதன் ஊடாக வடக்கு ,கிழக்கில் இன்னும் சமாதானம் ஏற்படவில்லை என்பதனையே காட்டுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவம் மக்களின் காணிகள், விவசாய காணிகளை கைப்பற்றி வைத்திருக்கின்றது. இதனால் மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.

 மக்களின் விவசாய காணிகள் இராணுவத்திடம்

மாகாண சபைகள் மக்களுக்காக நல்ல வேலைத்திட்டங்களை கொண்டு வந்த நிலையில் இராணுவம் மக்களின் காணிகளை கைப்பற்றி செயற்படுகின்றது. மேலும் வடக்கில் இராணுவ முகாம்கள் மற்றும் சோதனை சாவடிகள் இருக்கின்றன.

இங்குள்ள காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும். இதேவேளை ஒற்றையாட்சிக்குள் இருந்துகொண்டு வெளிநாட்டு தமிழர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாது.

சமஷ்டி மட்டுமே தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்கும் | Samashti Alone Will Give Freedom To Tamils

வடக்கு, கிழக்கிற்கு நீதி வழங்க வேண்டும். எங்களுடைய தேவைகள் எங்களுக்கு முன்னுரிமையதாகவே இருக்குமே தவிர மத்திய அரசுக்கு தேவையானதாக இருக்காது. எனவே ஒற்றையாட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான அதிகார பகிர்வை செயற்படுத்த வேண்டும் என்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.