சம்பந்தன் எம்.பிக்கு விடுமுறை வழங்கவும்! நாடாளுமன்றில் கோரிக்கை

0
472

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பிக்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்குமாறு நாடாளுமன்றின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இந்நிலையில் அவரது கோரிக்கைக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்குவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார்.