புத்தளத்தில் கரையொதுங்கிய டொல்பின்கள் !

0
266

புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் உயிரிழந்த நிலையில் இரண்டு டொல்பின்கள் கரையொதிங்கியுள்ளது.

அத்துடன், இரண்டு டொல்பின்கள் உயிருடன் மீட்கப்பட்டு ஆழமான பகுதியில் மீனவர்களினால் விடுவிக்கப்பட்டது.

உயிரிழந்த டொல்பின்கள்

புத்தளம் வண்ணாத்திவில்லு திருக்கப்பல்லம் பகுதியில் இரண்டு டொல்பின்கள் நேற்று (16) காலை உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியுள்ளது.

குறித்த டொல்பின்கள் வலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

புத்தளத்தில் கரையொதுங்கும் டொல்பின்கள் !(Photos) | Dolphins Coming Ashore In Puttalam

உயிரிழந்த டொல்பின்களுக்கு மிருக வைத்தியர் எச்.கே. இசுருவினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

7 அடி நீளம் கொண்ட டொல்பினொன்றும் 4 அடி நீளம் கொண்ட டொல்பினொன்றுமே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியிருந்தது.

புத்தளத்தில் கரையொதுங்கும் டொல்பின்கள் !(Photos) | Dolphins Coming Ashore In Puttalam

இதேவேளை புத்தளம் வண்ணாத்திவில்லு கல்லடி களப்பின் கரையோரத்தில் இரண்டு டொல்பின்கள் அப்பகுதி மீனவர்கள் உயிருடன் பாதுகாப்பாக மீட்டனர்.

புத்தளத்தில் கரையொதுங்கும் டொல்பின்கள் !(Photos) | Dolphins Coming Ashore In Puttalam

அத்துடன் உயிருடன் மீட்கப்பட்ட குறித்த இரண்டு டொல்பின்களும் படகில் சென்று ஆழமான பகுதியில் விடுவித்தனர்.