பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் முதன் முறையாக சேர்ந்த இலங்கை!

0
447

உலகில் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் உணவு தட்டுப்பாடு

இலங்கையானது கடும் உணவு தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக உணவுத் திட்டத்தால், கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் முதல் தடவையாக பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையிலும் இலங்கை பட்டினி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

முதல் தடவையாக பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை! | Sri Lanka In The List Of Starving Countries

எச்சரிக்கை

குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியமும் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை உட்பட 19 நாடுகளில் உணவு பாதுகாப்பற்ற நிலை காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவு பாதுகாப்பற்ற நிலை காணப்படும் நாடுகளில் ஆப்கானிஸ்தான், எதியோப்பியா, நைஜீரியா, தென் சூடான், சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

அத்துடன், இலங்கையும் இந்த அபாய கட்டத்தை நெருங்கி வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.    

முதல் தடவையாக பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை! | Sri Lanka In The List Of Starving Countries