இளவரசர் வில்லியம் மற்றும் கேட்ஸ் ஒரு ரகசிய தோட்டம்!

0
472

இரண்டாம் எலிசபெத் ராணியின் மரணத்திற்குப் பிறகு இளவரசர் வில்லியம் மற்றும் கேட் இருவரும் பண்டைய ல்வினிவெர்மோட் தோட்டத்தை மரபுரிமையாக பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அத்துடன் சார்லஸ் பதவி வகித்த வேல்ஸ் இளவரசர் பட்டத்தை அவரது மூத்த மகன் வில்லியம் மரபு வழியாக வழங்க பெற்றார். இதன் மூலம் ராணியாரின் மரணத்திற்கு பிறகு புதிய வேல்ஸ் இளவரசராக வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டன் வேல்ஸ் இளவரசியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட்ஸ் தம்பதிக்கு ரகசிய தோட்டம்! | Prince William And Kate S Secret Garden

மரபுரிமையாக பெற்ற Llwynywermod Estate

இந்நிலையில் வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது ராணி கன்சார்ட் கமீலா அடிக்கடி அமைதியாக வசிக்கும் லாண்டோவேரிக்கு அருகிலுள்ள மைட்ஃபாயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ல்வினிவெர்மோட் தோட்டம் (Llwynywermod Estate) வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் மரபுரிமையாக பெற்றுள்ளனர்.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட்ஸ் தம்பதிக்கு ரகசிய தோட்டம்! | Prince William And Kate S Secret Garden

Carmarthenshire மூலையில் அமைந்துள்ள பரந்து விரிந்த இந்த பழங்கால சொத்துகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு சார்லஸ் மன்னரால் வாங்கப்பட்டது.

அங்கு மன்னர் சார்லஸ் ஒவ்வொரு ஆண்டும் செயின்ட் டேவிட் தினத்தில் இந்த பழங்கால சொத்திற்கு வருகை தந்து, அவரது அழகான நேரத்தை செலவழித்து வந்ததாக வேல்ஸ் ஆன்லைன் தெரிவித்துள்ளது.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட்ஸ் தம்பதிக்கு ரகசிய தோட்டம்! | Prince William And Kate S Secret Garden