அமெரிக்காவில் பிறந்த அதிசய ஒட்டகச்சிவிங்கி குட்டி!

0
399

அமெரிக்காவின் கொலம்பஸ் விலங்குத் தோட்டத்தில் அதிசய ஒட்டகச்சிவிங்கிக் குட்டி ஒன்று பிறந்துள்ள நிலையில் மக்கள் பார்வையிட குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மசாய் (Masai) வகை ஒட்டகச்சிவிங்கியான அது கடந்த மாதம் 31ஆம் திகதி 12 வயது ஸூரிக்குப் (Zuri) பிறந்ததுள்ளது. இன்னும் பெயரிடப்படாத அந்த ஆண் ஒட்டகச்சிவிங்கிக் குட்டி ஆரோக்கியமாய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன் தந்தை, நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளால் சென்ற ஆண்டு கருணைக் கொலை செய்யப்பட்டது. சுமார் 15 மாதக் கர்ப்ப காலத்திற்குப் பின் அந்தக் குட்டி பிறந்தது.

அதுவே கொலம்பஸ் விலங்குத் தோட்டத்தில் பிறந்துள்ள 23ஆவது ஒட்டகச்சிவிங்கி. மசாய் வகை ஒட்டகச்சிவிங்கிகள் அழிந்துபோகும் ஆபத்தை எதிர்நோக்குபவை.

டான்ஸனியாவிலும் கென்யாவிலும் அந்த வகை ஒட்டகச்சிவிங்கிகள் சுமார் 35,000 மட்டுமே எஞ்சியுள்ளன.

ஆனால் சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதாலும் வாழ்விடம் அழிந்துவருவதாலும் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.