இலங்கையில் முச்சக்கரவண்டியில் இப்படி ஒரு மோசடி சம்பவம்!

0
289

பண்டாரகம ரம்புக்கன லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போலி எரிபொருள் தாங்கியுடன் முச்சக்கரவண்டி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட முச்சக்கரவண்டிக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் டீசல் ஏற்றியதை கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து குறித்த முச்சக்கரவண்டியின் சோதனையில் மோசடியை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

டீசல் முச்சக்கர வண்டியின் எரிபொருள் தாங்கி கொள்ளளவு பொதுவாக 9 லீற்றர் எனவும் போலி எரிபொருள் தாங்கி 19 லீற்றர் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் முச்சக்கரவண்டியில் இப்படியும் ஒரு மோசடி சம்பவம்! | Auto Seized With Fake Fuel Tank In Bandaragama

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரகம, அட்டாலுகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.