உலகின் அதிக பணவீக்க நாடுகளின் பட்டியலில் 3வது இடத்தில் இலங்கை!

0
558

அமெரிக்காவின்  ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பணவீக்க அறிக்கையில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு நேற்று (11) வெளியிட்ட அறிக்கையின் படி இலங்கை இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.

உலகளவில் மூன்றாவது இடத்தைப்பிடித்த இலங்கை! | Inflation Report

பணவீக்க அறிக்கையின் படி ஜிம்பாவே முதல் இடத்தில் இருப்பதோடு இரண்டாவது இடத்தில் துருக்கி  இடம்பெற்றுள்ளது.

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஸ்டீவ் ஹங்கின் அவர்களால் உலக பொருளாதார நிலைமை குறித்து மாதந்தோறும் பணவீக்க சுட்டெண் வெளியிடப்படுகிறது.

இதில் வெனிசுலா நான்காவது இடத்திலும் லெபனான் ஐந்தாவது இடத்திலும் பாகிஸ்தான் பன்னிரண்டாவது இடத்திலும் உள்ளது.