வாழ்நாளில் பார்க்க வேண்டிய இடங்கள்: உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை

0
31

“2024 ஆம் ஆண்டு உங்கள் வாழ்நாளில் சுற்றுலா மேற்கொள்ள உலகின் சிறந்த ஐந்து நாடுகளில்” இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாளிதழான CEOWORLD இல் “2024 ஆம் ஆண்டு உங்கள் வாழ்நாளில் பார்வையிட சிறந்த நாடுகள்” தரவரிசையில் 10 நாடுகள் இடம்பிடித்துள்ளன.

குறித்த நாளிதழில் தாய்லாந்து, கிரீஸ், இந்தோனேசியா, போர்த்துக்கல், இலங்கை, தென்ஆபிரிக்கா, பெரு, இத்தாலி, இந்தியா மற்றும் ஐக்கிய அரேபியா ஆகிய நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த தரவரிசைப் பட்டியலில் இலங்கைத் தீவு ஐந்தாம் இடத்தை பெற்றுக்கொண்டமை சிறப்புக்குரிய விடயமாகும்.

இலங்கையை அதன் அழகிய கடற்கரைகள், நட்புறவான மக்கள், மேலான இயற்கை, கலாச்சாரம் மற்றும் சாகச வாய்ப்புக்கள் என்பவற்றின் மூலம் ஆசியாவின் மிகவும் பெறுமதியான மற்றும் பசுமையான தீவாகவும் ஒரு சுற்றுலா விம்பமாகவும் நிலைநாட்டுவதே இலங்கை சுற்றுலாத்துறையின் நோக்கமாக காணப்படுகின்றது.

அத்துடன், சுற்றுலாவின் பங்குதாரர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் பயனளிக்கும் மிகப்பெரிய அந்நிய செலாவணியைச் சம்பாதிக்கும் நாடாகவும் இலங்கயை நிலைநிறுத்துவதே ஆகும். இந்நிலையில் தற்போது சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சி கண்டு வருகிறது.