யாழ்.பொன்னாலையில் பிஞ்சு குழந்தை வாளிக்குள் விழுந்து நீரில் மூழ்கி பலி!

0
283

யாழ் பொன்னாலை பகுதியில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னாலை சுழிபுரம் பகுதியை சேர்ந்த யசோதரன் யஸ்மிகா (வயது 1வருடம் 10 மாதம்) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

வீட்டு முற்றத்தில் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்த வேளை, அருகில் இருந்த 20 லீற்றர் கொள்வனவு உடைய தண்ணீர் வாளிக்குள் இருந்த கரண்டி ஒன்றினை எடுக்க முற்பட்டுள்ளது.

இதன்போது குழந்தை வாளிக்குள் தலை கீழாக விழுந்து நீரில் மூழ்கியுள்ள பதறியடித்த வீட்டார் குழந்தையை மீட்டு மூளாய் வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

யாழில் பிஞ்சு குழந்தையொன்றிற்கு நேர்ந்த துயரம் | Tragedy Befell A Baby In Jaffna