பெலரூஸை வம்புக்கு இழுக்கும் ரஷ்யா!

0
243

ரஷ்யா அதன் நட்பு நாடான பெலரூஸைப் போருக்குள் இழுக்கப் பார்ப்பாதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ரஷ்யாக மீது உக்ரைன் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

சுமார் 20 ரஷ்ய எறிபடைகள் பெலரூஸ் எல்லையிலிருந்து உக்ரைனுக்குள் பாய்ச்சப்பட்டதாக  உக்ரேன்   கூறியுள்ளது.

மற்றுமொரு நாட்டை வம்புக்கு இழுக்கும் ரஷ்யா!

6 ரஷ்யப் போர்விமானங்கள் பெலரூஸின் தெற்கே உள்ள பெட்ரிக்காவ் (Petrykaw) நகரிலிருந்து 12 ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக உக்ரைனிய உளவுச்சேவைப் பிரிவு தெரிவித்தது.

ரஷ்யப் படையினர் உக்ரேனியத் தலைநகர் கீவின் வடக்கிலும் சுமி வட்டாரத்திலும் உள்ள இலக்குகளைத் தாக்கியிருப்பதாகப் பிரிவு தெரிவித்தது.

பெரிய அளவிலான தாக்குதல்கள் முக்கியக் கட்டமைப்புகளைச் சேதப்படுத்தியுள்ள அதேவேளை, உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை என உக்ரைனிய இராணுவம் தெரிவித்தது.