பொதுமக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்த எரிபொருள் நிலைய உரிமையாளர்

0
354

மஹரகம – தெஹிவளை வீதியில் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு அருகில் அமைந்துள்ள Highway Enterprises பெற்றோல் நிலையத்தில் இன்று பொதுமக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் எம்.டி.எஸ். பெரேரா மக்கள் படும் துன்பங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மண்ணெண்ணெய் பெறுவதற்காக பெருமளவான மக்கள் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகம்

இதற்கிடையில் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அங்கிருந்த பெண் ஒருவரும் குழந்தையும் கீழே வீழ்ந்துள்ளனர்.

குழந்தைக்கு சற்று உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் மண்ணெண்ணெய் அவசியம் என்பதால் குழந்தையை இந்த இடத்திற்கு அழைத்து வந்ததாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இங்கிரியவில் உள்ள உருகல சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் இரவு பகலாக எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.

மேலும் மக்களின் அசௌகரியத்தை உணர்ந்தே இந்த செயலை மேற்கொண்டதாக அதன் உரிமையாளர் கெலும் பிரசன்னவும் தெரிவித்திருந்தார்.