ரஷ்யாவிலிருந்து முழுவதுமாக வெளியேற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு

0
172

ரஷ்யாவிலிருந்து முழுவதுமாக டாடா சொல்லும் மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 5 மாதங்களை நெருங்கி விட்ட நிலையில் கிழக்கு உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களை குவித்து ரஷ்யா கடும் தாக்குதல் நிகழ்த்தி வருவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதால் ரஷ்யா மீது மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளன.

இதையடுத்து ரஷ்யாவில் புதிய சேவைகளை வழங்குவதில்லை என அறிவித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முழுவதுமாக வெளியேற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன.