திருமணத்திற்கு செலவு செய்யும் பணத்தில் வீடு கட்டிக் கொடுத்த புதுமண தம்பதிகள்

0
255

தென்னிலங்கையில் புதுமண தம்பதியின் செயற்பாட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மாத்தறையில் திருமணத்திற்கு செலவு செய்யும் பணத்தை கொண்டு குடும்பம் ஒன்றுக்கு வீடு நிர்மாணித்துக் கொடுத்துள்ளனர்.

புதுமண தம்பதியின் மனிதாபிமான செயல்

வங்கி ஒன்றியில் பணியாற்றும் இளைஞனுக்கும் ஆயுர்வேத வைத்தியராக பணி புரியும் பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு எட்டப்பட்டது.

கடந்த வருடம் பிரமாண்டமான முறையில் ஹோட்டல் ஒன்றில் திருமண நிகழ்வினை நடத்த இரு வீட்டாரும் தீர்மானித்திருந்தனர். எனினும் அதனை விரும்பாத புதுமண தம்பதியினர், மாத்தறையில் கணவனை இழந்த நிலையில் 3 பிள்ளைகளுடன் பாதுகாப்பற்ற வீட்டில் வசித்துவந்த பெண்மணிக்கு புதிய வீடு கட்டிக்கொடுக்க தீர்மானித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு புதிய வீடு

அதற்கமைய திருமண செலவுக்காக வைக்கப்பட்டிருந்த 20 இலட்சம் ரூபா செலவில் வீடு கட்டிக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய நிர்மாணிக்கபட்ட வீடு அண்மையில் உரிய பெண்ணிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் ஆடம்பரத்தை விரும்பும் பலர் தமது திருமண நிகழ்வுகளை பிரமாண்டமான முறையில் நடத்த ஆசைப்படுகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதியின் மனிதாபிமான செயற்பாடு பலரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புதுமண தம்பதி