பொழுதுபோக்குக்காக மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரை வாவிக்குள் தள்ளி கொலை

0
295

ஹிங்குரக்கொட, காளிங்கஎல – பட்டதுண பாலத்துக்கு அருகிலுள்ள வாவியில் பொழுதுபோக்கிற்காக மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரை வாவிக்குள் தள்ளி கொலை செய்ததாக கூறப்படும் நபர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிமெட்டிய வெல்எல பகுதியைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் கவுடுல்ல, காலிங்கபுர பிரதேசத்தைச் சேர்ந்த அஜித் ரணசிங்க என்ற 32 வயதான திருமணமாகாத நபரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி கிரிமெட்டிய அருகிலுள்ள பிரதேசத்தில் ஐந்து இளைஞர்கள் பொழுதுபோக்கிற்காக பட்டதுண பாலத்துக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அங்கு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது குடி போதையில் வந்த சந்தேகநபர் கொலையுண்டவருடன் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார்.

இதன்போது அவரைத் தள்ளிச் சென்று பாலத்திலுள்ள கொங்கிரீட் தூணில் நிறுத்தி வைத்த போது அந்த நபர் பாலத்திலிருந்து கீழே விழுந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.