ராணுவத்திடம் கெஞ்சினாரா இம்ரான் கான்? மர்யம் நவாஸ் வெளியிட்ட தகவல்

0
399

பாகிஸ்தானில் தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) கடைசி நிமிடம் வரை போராடியதாக மர்யம் நவாஸ் (Maryam Nawaz) கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அரசு மீது எதிர்கட்சிகள் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) பதவியேற்றார்.  

இந்த நிலையில் லாகூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் மகளுமான மர்யம் நவாஸ் கலந்து கொண்டு பேசினார்.

Maryam Nawaz

அப்போது அவர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது பிரதமர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கடைசி நிமிடம் வரை போராடியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பதவியில் தொடர்வதற்காக ராணுவத்திடம் உதவி கேட்டு இம்ரான் கெஞ்சியதாகவும், ஆனால் ராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் மர்யம் நவாஸ் கூறினார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தன்போது தன்னைக் காப்பாற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவர் ஆசிஃப் அலி ஜர்தாரியிடமும் இம்ரான் கான் கெஞ்சியதாகவும் மர்யம் நவாஸ் தெரிவித்தார்.